நிலவும் வெப்பமான காலநிலை குறித்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்ட மக்கள் அதிக அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில், 32 முதல் 41 பாகை செல்சியஸ் அளவிலான வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, போதுமான அளவு நீராகாரத்தை அருந்துமாறும், குளிர்மையான நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.