இலங்கைக்கு கைகொடுக்கிறதா சீனா? – விமல் வெளியிட்ட முக்கிய தகவல்

0

எதிர்வரும் சில தினங்களில் சீன அரசிடமிருந்து 1.6 பில்லியன் டொலர் கடன் தொகை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தாா்.

அதற்கமைய, இந்த தொகையினூடாக இலங்கை ஜனவரி மாதம் செலுத்த வேண்டிய கடன் தவணையை செலுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டாா்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டாா்.