நான்கு வகையான பொலித்தீனை பயன்படுத்துவதற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று(புதன்கிழமை) முதல் குறித்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனம் அடங்கிய போத்தல், பக்கற்றுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
மருத்துவ ஆய்வு,வைத்தியசாலை பயன்பாட்டிற்கான உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.