ஈழம் என்ற சொல்லுக்கு எந்தவிதத்திலும் தவறு கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஈழம் என்றால் இலங்கை என்பதை அனைவரும் அறிவார்கள் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
தேசிய கீதத்தின் தமிழாக்கத்தில் ஈழம் என்ற வசம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார்.
”ஈழ சிரோமணி” என இலங்கை தேசிய கீதத்தின் தமிழாக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு தமிழில் கூறப்படும் பெயர்களில் ஒன்றே ஈழம் என அவர் நினைவுப்படுத்தினார்.
லங்கா என சிங்களத்தில் பயன்படுத்தப்படும் பெயருக்கு ரத்ததீப என்ற பெயரும் சிங்களத்தில் பயன்படுத்தப்படுவதாக கூறிய அவர், அதேபோன்றே தமிழில் ஈழம் பயன்படுத்தப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.
பிரபாகரன் ஈழத்திற்காக போராட்டத்தை நடத்தவில்லை எனவும், தமிழீழத்திற்காகவே போராட்டங்களை அவர் நடத்தியதாகவும் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
ஈழம் என பயன்படுத்தப்படுவது, மிக மிக சரியான ஒன்று என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈழம் என்ற வசனத்தை பயன்படுத்துவதில் எந்தவொரு தவறும் கிடையாது என அவர் கூறுகின்றார்.
ஈழம் என்பதற்கு தான் ஒருபோதும் எதிர்ப்பு கிடையாது என கூறிய அவர், தமிழீழத்திற்கே தான் எதிர்ப்பு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று, இலங்கைக்கு தான் எதிர்ப்பு கிடையாது எனவும், ஆனால் சிங்கள இலங்கைக்கு தான் எதிர்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழம் என்ற நாட்டை பிளவுப்படுத்தும் ஒரு பெயர் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஈழம் என்ற பெயரை தவறாக வெளிப்படுத்தி, அதனை சமூகமயப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
ஈழம் என்ற பெயர் பிரிவினைவாதத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது என ஊடகவியலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கூறிய போதிலும், அதனை அவர் நிராகரித்திருந்தார்.
அப்துல் கலாம் கூறிய ஒரு விடயத்தையும் அவர் இதன்போது நினைவூட்டினார்.
”முதலாவதாக நான் இந்திய பிரஜை. நான் தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்” என அப்துல் கலாம் கூறியதையும் அவர் நினைவூட்டினார்.
ஈழம் என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களானால், இலங்கை என்ற பெயருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டும் என மஹிந்த தேசபிரிய கூறினார்.