ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம்!

0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்தது.

இதன்போதே குறித்த அறிக்கையினை நிராகரிக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுவின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி ஊடாக ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் சில சந்தர்ப்பங்களில் அத்துமீறி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.