ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியை வழங்குமாறு மெல்கம் ரஞ்சித் கோரிக்கை

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பேராயரின் ஊடக பேச்சாளர் பேராசிரியர் கமிலஸ் பெர்ணான்டோ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து அறியப்படுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறு பேராயர் கோரியுள்ளாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.