அம்பாறை மாவட்டத்தின் உகன, தமன பிரதேசங்களுக்கு தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக குறித்த இரண்டு பகுதிகளுக்கும் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.