ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை இடம் பெறவுள்ளது.
கட்சித்தலைமையகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9.30 அளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் தொடர்பில் இன்றைய தினமும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சித்தலைவர் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் சிறிகொத்தவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.