ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்என ற பெயரில் மூன்றாவது தடவையாக 05 இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் அணி சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது என இலங்கை சைபர் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று, இலங்கையின் அமைச்சரவை அலுவலக இணையம், தூதரகத்தின் இணையத்தளங்கள், அரச நிர்வாக இணையங்கள் மற்றும் அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட இணையத் தளங்கலுக்குள் ஊடுருவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இருப்பினும் 05 இணையத்தளங்கள் மீது மட்டுமே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சைபர் தாக்குதலை இலங்கை விமானப்படை சைபர் கட்டளை மையம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றது.