கால்நடைகளை படுகொலை செய்ய தடை விதிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்

0

இலங்கையில் கால்நடைகளை படுகொலை செய்வதற்கு தடை விதிக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் திட்டத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்தார்.

ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோது இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.