கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று(வெள்ளிக்கிழமை) இவர் அனுமதிக்கப்பட்டிருந்ததாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 2ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து 33 பேர் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.