கொரோனா – அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை!

0

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில் நாளை(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலை குறிப்பாக, கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.