கடந்த ஒரு வாரமாக கொழும்பில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதால் குறித்த பகுதி அபாயமுடையது என சுகாதார தரப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை ஐந்து மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு மாவட்டத்தின் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் ஹுணுபிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, பறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60 தோட்டம், வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.