கொரோனா ஏற்பட்ட பெண் தொழில் செய்யும் இடத்தில் பலர் அண்மையில் சுகயீன விடுமுறை கோரியதாக தகவல்?

0

கம்பஹா மினுவங்கொட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களில் பலரும் அண்மையில் சுகயீன விடுமுறை கோரியிருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

39 வயதுடைய கொரோனா தொற்றுக்கு இலக்காகிய பெண், அந்த தொழிற்சாலையில் ஊழியர்களின் செயற்திறனை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்பவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.