அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் இருந்த வெளிநாட்டர் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 7 உணவகம் ஒன்றில் ஒன்றாக இருந்த பிரான்ஸ் பிரஜை ஒருவரே இவ்வாறு மாயமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்யவும் அவரை தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் பொலிஸார் அவரை தேடி வருவதாகவும் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த வெளிநாட்டவரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு பொது மக்களின் உதவியினை நாடியுள்ளார்.
குறித்த நபரை அடையாளம் கண்டால், அல்லது அவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.