கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஓமானிலிருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.
136 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.