கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0

இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த 4 பேரும் பங்களாதேஷில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். 

அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.