இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2689 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 08 பேர் வைரஜ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 06 பேர் கந்தக்காடு போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், ஏனைய இருவரும் குறித்த நபர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2012 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் தொற்றுக்கு உள்ளான 674 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.