கோவிட் தொற்று நோய் ஆபத்து நிலைமையானது நாட்டுக்குள் மீண்டும் அதிகரிக்கலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸின் மரபணு மாறிய திரிபுகள் மற்றும் புதிய திரிபுகள் நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளமை இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாரத் கொழம்பகே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை புரிந்து கொண்டு மீண்டும் ஆங்காங்கே பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் கோவிட் தடுப்பூசி மூலம் கிடைக்கும் பாதுகாப்பு சம்பந்தமாக நாட்டிற்குள் உரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கொழம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.