கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த இலங்கையின் ஐந்தாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கிரான் பிரதேசத்திற்க்கான ஆசனத்தை வெற்றி கொண்டார் கோவிந்தன் தினேந்திரன்.
நாடு முழுவதுக்குமாக ஒரே நேரத்தில் இலத்திரணியல் வாக்குப்திவு மூலம் பிரதேசத்திற்க்கு ஒருவரை தெரிவு செய்வதற்க்காக நடைபெற்ற இத்தேர்தலில் வாக்குப்பதிவு காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.30 மணிவரை நடைபெற்றது.
சுமூகமாக நடைபெற்ற கோறளைப்பற்று பிரதேசத்திற்க்கான தேர்தலில் 206 வாக்குகளைப்பெற்று வெற்றி கொண்டார்.
கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் சிறப்புக் கற்கை பட்டதாரி மாணவனான இவர் பாலையடித்தோணா கடற்கன்னி இளைஞர் கழத் தலைவர் என்பதுடன் 2014 வருடம் தொடக்கம் 2016ம் ஆண்டு வரை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச சம்மேளன தலைவர் பதவியையும் வகித்துள்ளதோடு , பிரதேச சம்மேளனத்தின் தற்போது அமைப்பாளர் பதவியையும் வகிக்கின்றார்.
மேலும் இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்க கோரளைப்பற்று தெற்கு பிரதேச இணைப்பாளரராகவும் செயற்பட்டு வரும் தினேந்திரன் சிறந்த சமூக சேவகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.