டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழப்பு

0

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 28பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அருண ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வருடங்களை காட்டிலும் இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

அத்துடன்,  நாட்டில் தொடர்ந்தும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சில அமைப்புக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.