தனியார் பாடசாலைகள், தனியார் வகுப்புக்களுக்கும் விடுமுறை

0

நாடு முழுவதும் நாளை முதல் ஆரம்பமாகும் இரண்டாம் தவணை விடுமுறையானது தனியார் மற்றும் இலங்கையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலைகளுக்கும் பொருந்தும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் உள்ள சகல தனியார் வகுப்புக்களும் நாளை முதல் மறுஅறிவித்தல் வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அனைத்து முன்பள்ளிகளும் நாளை முதல் மூடப்படுகிறது.

கம்பஹா மாவட்டம், திவுலப்பிடிய பகுதியில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்ட நிலையில் நாடு முழுவதும் கொரோனா சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதியான பெண்ணின் 16 வயது மகளுக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.