தேர்தலை நடத்தவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது என்பதால் தேர்தல் ஆணைக்குழு அதற்காக தயாராகவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்ததும் தேர்தல் ஆணைக்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ள பிரதமர் இந்த தாக்குதலிற்கான திட்டம் எவ்வளவு ஆழமானது என்பதை கண்டுபிடிக்காமல் ஓரிருவரை தண்டித்து பயனில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு தாக்குதல் நடைபெறுவது உறுதி என கருத்து வெளியிட்ட தனிநபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.