தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலொன்று நாளை நடைபெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, மற்றும் அதன் அதிகாரிகளுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சகல அரசியற் கட்சிகளினதும் பிரதிநிதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்திப்பின் போது, தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.