நாட்டின் 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

0

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று(செவ்வாய்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளுக்கு இன்று இரவு 8.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியேறும்போது தமது அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வழங்கப்பட்டுள்ள தினத்தை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.