கொரோனா தொற்றாளர்களாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலினை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.