பதவி விலகினார் மேல்மாகாண ஆளுநர்  சீதா அரம்பேபொல!

0

மேல்மாகாண ஆளுநர்  சீதா அரம்பேபொல பதவி விலகியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில்   ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவில் அவரது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே மேல்மாகாண ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபோல பதவி விலகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.