பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அறிக்கை

0

தற்போதைய COVID நிலைமையில், பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் வரை மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து கூட்டு பிரார்த்தனைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினர் மற்றும் WACF சபையினால் விடுக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்கு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களில் வுழூ செய்யும் பகுதி மற்றும் கழிவறைகள் மூடப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை WACF சபையின் பணிப்புரைக்கு அமைய , இந்த அறிவிப்புக்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிக்கையினூடாக வௌியிட்டுள்ளது.