பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!

0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமைகளை கையாளும் செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கும் விதத்தில் பிரதமர் தலைமையில் வாராந்த சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரை அலரிமாளிகையில் சர்வ கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

மக்கள் பிரச்சினைகள் குறித்த இணையதள கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. மந்திரி.எல்கே (manthiri.lk) எனும் இணையதளம் மூலமாக இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நாளை பிற்பகல் ஆறு மணிக்கு பிரதமர் தலைமையில் ஆளும்கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.