புதிய மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாடு ஆரம்பம்!

0

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாடு இன்று(23) முதல் ஆரம்பமாகவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தற்போதைய சூழ்நிலையில் ஒன்லைன் மூலமாக மாத்திரம் பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை www.ucg.ac.lk என்ற இணையத்தள முகவரியில் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

2019-2020 கல்வியாண்டுக்காக 41,500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனரென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.