கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று பூசா கடற்படை முகாமில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
136 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க கூடிய வகையில் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று வெலிகந்தை வைத்தியசாலையில் கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு, தடையின்றி சிகிச்சை வழங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் குறித்த பிரிவில் ஸ்தாபிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அனுமதிக்கப்பட்டுள்ள அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில், இட வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுமாயின், தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சை வழங்குவதற்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.