பெண்கள் கழிவறையில் கமரா – விசாரணை ஆரம்பம்!

0

கம்பஹா, பகுதியிலுள்ள தனியார் மேலதிக வகுப்பொன்றில் பெண்கள் கழிவறையில் நவீன கமரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அத்துடன், கமரா பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இப்படியான செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளதாக மாணவிகள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், பலரும் அச்சமடைந்துள்ளனர்.

அதேவேளை, மேற்படி பயிற்சி வகுப்பின் உரிமையாளர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வகுப்புகளை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.