மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிஸார் உட்பட 15 பேருக்கு கொரோனா

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பொலிஸார் உட்பட 15 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 440ஆக அதிகரித்துள்ளதுடன், 5 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் தொடர்ந்து எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுகளில் ஒருவருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 4 பேருக்கும், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்று 10 பேர் உட்பட 15 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 215 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன் 222 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே நாளாந்தம் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளைப் பேணி அவதானமாக நடந்து கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.