மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!

0

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.