முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது – இராணுவ ஊடகப் பேச்சாளர்!

0

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நினைவு தூபியை உடைக்க வேண்டிய தேவை இராணுவத்துக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி அடையாளம் தெரியாதவர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, குறித்த நினைவு தூபி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.