மூன்றாம் தவணை: மாற்று வழிமுறையினூடாக முன்னெடுக்க ஏற்பாடு

0

கொவிட் 19 நிலைமைகள் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிகளின் மூலம் தொடராக கொண்டு செல்வதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைகல்வி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவகம், மேல் மாகாண பிரபல பாடசாலைகள் மற்றும் தமிழ் மூல மாணவர்களுக்காக யாழ்ப்பாண பிரபல பாடசாலைகள் திணைக்களங்கள் மாகாண கல்வித் திணைக்களங்கள் ஆகியவற்றின் ஒன்றிணைவோடு, இலத்திரனியல் ஊடகங்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக இந்த விசேட திட்டத்தை முன்னெடுக்க அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உபாலி எம் சேதர தெரிவித்துள்ளார். 

தரம் 3 தொடக்கம் உயர் தரம் வரை தமிழ், சிங்கள், ஆங்கில மொழிகளில் இந்த விசேட ஒளிபரப்பு இடம்பெறவுள்ளது. 

சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நொவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது

நாட்டின் பிரதான தனியார் மற்றும் அரச தொலைக்காட்சி அலைவரிசைகளுடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஒளிபரப்புக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. 

தொடர்ச்சியாக 9 வாரங்களுக்கு மூன்றாம் தவணையை முழுமையாக கற்பிக்கும் வகையில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது.