கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தேசிய செயற்பாட்டு மையத்தில் ஊடக சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமானது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் இன்று (வியாழக்கிழமை) இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.