மேலும் 7 பேரின் சடலங்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, 9 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே அடக்கப்பட்ட ஏறாவூர் சடலங்கள் இரண்டுடன் சேர்த்து காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்த 3 சடலங்களும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து 4 சடலங்களும் என இதுவரை 09 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஏறாவூர் 02
சாய்ந்தமருது 02
மட்டக்களப்பு 01
காத்தான்குடி 01
அக்கரைப்பற்று 01
சம்மாந்துறை 01
அட்டாளைச்சேனை 01 என 9 சடலங்களும் இரவு 8.45 வரையான நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ன.
குறித்த பணிகளை நேரடியாக பார்வையிடுவதற்காக ஒதுக்கப்பட்ட அடைக்கப்பட்ட பகுதிக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா பார்வையிட்டார்.
மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.