யாழ்.காங்கேசன்துறை தொடக்கம் வட – கிழக்காக திருகோணமலை வரையிலுமான மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து வடமேற்காக புத்தளம் மற்றும் வடகிழக்காக திருகோணமலை வரையான கரையோர பகுதி மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“புரவி” புயலானது மன்னாருக்கு வடமேற்கு திசையில் 145 கிலோ மீற்றர் துாரத்தில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிலை கொண்டிருந்தது. மேலும் ஆழமான தாழமுக்கமாக அது வலுவிழந்துள்ளது.

இந்நிலையில் காங்கேசன்துறையிலிருந்து வடமேற்காக புத்தளம் வரையிலும், வடகிழக்காக திருகோணமலை வரையிலும் கடலில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிலோ மீற்றர் தொடக்கம் 75 கிலோ மீற்றர் வரை

அதிகரிக்கும். கடல் தொடர்ச்சியாக கொந்தளிப்புடன் காணப்படும். எனவே கரையோர பகுதி மக்கள் குறிப்பாக கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும்.

என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.