விடுமுறையினை ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

0

கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலையினை மதிப்பாய்வு செய்யும்வரை பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீட்டிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதிப்பாய்வு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்த அறிவிப்பினை வெளியிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக கப்பல்கள் சேவைகளையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்குமாறும் அச்சங்கம் ஜனாதிபதியிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.