அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது!

0

அடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் கடந்த 2018ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவரே இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.