அத்தியாவசிய சேவைக்கான ஊரடங்கு அனுமதிபத்திரக் காலம் நீடிப்பு

0

அரச மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களின் அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதிக் காலம், மே மாதம் 31ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அரச மற்றும் தனியார் துறையினருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு அனுமதி பத்திரம் நாளையுடன் நிறைவடையவிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.