அயல் நாடுகளின் எல்லைகளை மூடியது ஜேர்மனி!

0

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஜேர்மனி அதன் எல்லைகளை மூடியுள்ளது.

பிரான்ஸ், ஆஸ்த்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் எல்லைகள் வர்த்தக போக்குவரத்து தவிர்ந்த ஏனைய அனைத்துக்காகவும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக நகரங்களை மூடுவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரான்ஸ் சுகாதார சேவைகளின் பிரதானி, அதன் காரணத்தினாலேயே இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.