அரசாங்கத்தின் எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை

0

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்கு உட்படாமல் தலைமறைவாகியோருக்கு அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வைத்தியசாலையில் தன்னை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு பதிவு செய்யாமல் இருப்போர் தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் நிச்சயமாக 14 நாட்கள் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.