கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை நாடு எதிர்த்துப் போராடும்போது அரசியல் பற்றி விவாதிக்க இது சரியான தருணம் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குருத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.
மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாகுவதை தடுக்கும் பொருட்டே ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளைப் பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.