அரச ஊழியர்களையும் பொதுமக்கள் தாக்குவார்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

அரச அதிகாரிகளையும் பொதுமக்கள் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் அடுத்ததாக அவர்களையே தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து கொண்டு, அதற்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்களை வகுப்பதில் அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.