அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்களை திறக்க நடவடிக்கை!

0

அருங்காட்சியகங்கள், தேசிய தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இவ்வாறு அனைத்து அருங்காட்சியகங்களும் திறக்கப்படவுள்ளதாக தேசிய அருங்காட்சியகத் துறை பணிப்பாளர் சலூஜா கஸ்தூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 11 அருங்காட்சியகங்கள் இவ்வாறு மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை அருங்காட்சியகங்கள் அனைத்தும் திறந்திருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.