அலரி மாளிகையினை முற்றுகையிட்டிருந்த “கோட்டா கோ கம“ போராட்டக்காரர்கள்!

0

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தனர்.

ரம்புக்கனை நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் சாமிந்த லக்ஷான் உயிரிழந்தார்.

அவரின் இறுதிக்கிரியைகள் ஹிரவட்டுன மயானத்தில் இன்று நடைபெற்றன.

இந்தநிலையிலேயே காலி முகத்திடலில் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள போராட்டக்காரர்கள் இன்று மாலை அலரிமாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையின் வாயில்களில் சிவப்பு நிறம் தெளிக்கப்பட்ட வெள்ளைக் கொடிகளை கட்டியிருந்தனர்.