போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினால் இது தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாள்தோறும் சராசரியாக ஐந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவித்துள்ளது. போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் மோசடிகள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
சில நபர்கள் இதனை வர்த்தக முயற்சியாக மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.
மக்கள் எந்தவொரு நாட்டுக்கேனும் செல்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் இதனை சில போலி வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாத நிறுவனங்கள் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
யாரேனும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்தால் உடனடியாக அந்த நிறுவனத்தின் பதிவினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இவ்வாறான நபர்களிடம் முதலிலேயே பணத்தை செலுத்திவிட வேண்டாம் எனவும், போலியான முகவர் நிறுவனங்கள் தொடர்பில் 1989 என்ற எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டு தெரியப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.