இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது.
அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 4 மணிக்கு மீண்டும் அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்களின் நலன் கருதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், பொறுப்புடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய சேவை தவிர்ந்த வேறு விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைமுறைகளைத் தவறாகக் கையாள்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.